டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் அதிரடி கைது..!
சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ் (39) என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார். பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.
இந்தநிலையில் பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இணையத்தில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட டெலிகிராம் செயலி பயன்படுத்துவதாக கூறி கைது செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”