மெட்ரோவில் தொழில் நுட்ப கோளாறு..!! இப்படி இருந்தா இனி எப்படி மெட்ரோல போறது..?
சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமானநிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் பாதை இன்று இயந்திர கோளாரின் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் பல ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பணிகள் முடிந்தவுடன் மெட்ரோ சேவை வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து சில தகவல்களை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிட்டில் மவுண்டில் இருந்து, அறிஞர் அண்ணா ஆலந்தூர் வரை, ஒற்றை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கும்.
விம்கோ நகர் மெட்ரோவில் இருந்து ப்ளூ லைனில் உள்ள லிட்டில் மவுண்ட் வரை சாதாரண சேவைகள் தற்போது இயங்கி கொண்டு இருக்கிறது.
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை பரிசோதனையில் உள்ளது.
விம்கோ நகரில் இருந்து விமானம் நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் கிண்டியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கிரீன் லைனில் செல்லும் அனைத்து மெட்ரோக்களும் வழக்கம் போல இயங்கும்.
விம்கோ நகர் மெட்ரோவில் இருந்து சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகள் பயணம் செய்யலாம்.
ஆனால் விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் சென்று வழித்தடம் மாறி, விமான நிலையம் செல்ல முடியும். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் மெட்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..