பாஜகவை வீழ்த்த இத்தனை கட்சிகள் கூடுதா..?
I.N.D.I.A ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வருகிற 2024ம் ஆண்டு மக்களவை ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியாவில் கூட்டணியை உருவாக்கியது. பாட்டனா மற்றும் பெங்களூருவை தொடர்ந்து இன்று 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
தொகுதி பங்கீடு ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், மக்களை வியூகம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கான திட்டங்களை செயல் படுத்துவற்காக பல குழுக்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டங்களை அமலுக்கு கொண்டுவருவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளார் மும்பை விமானம் நிலையம் வந்த முதலமைச்சரை அந்த மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று மாலை நடக்கும் I.N.D.I.A கூட்டம் முடிந்த பின், உத்தவ் தாக்கரே முதல்வருக்கு விருந்து அளிக்க உள்ளார்.., இந்தியா கூட்டணியின் நாளைய கூட்டம் முடிந்தவுடன் அன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பு உள்ளார், அரசியல் பார்வையாளர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..