அந்தகன் படம் பட்டையை கிளப்புமா அல்ல படுத்துக்குமா..? ஒரு ரிவியூ பாப்போமா..
பிரசாந்த்:
90களின் காலக்கட்டத்தில் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். புகழின் உச்சியில் இருந்த இவர் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அந்தகண் திரைப்படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்துள்ளார்.
அந்தகன்:
இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல்:
நேற்று (அகஸ்ட் 9) ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்தநிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும், ரூபாய் 65 லட்சத்தை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைந்துள்ளதால், இன்று நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
படம் சுருக்கம்:
2018ம் ஆண்டு வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் அந்தகண் திரைப்படம். அந்த படத்தை பார்த்தவர்களுக்கு படத்தின் கிளைமக்ஸ் காட்சிகள் குறித்த தகவல்கள் தெரிந்திருக்க கூடும். படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பாய்லர் இல்லாத கதையாக அந்தகன் கதையை சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் தனது லட்சயத்திற்காக கண் தெரியாதது போல் நடித்த பிரசாந்த் நவரச நடிகர் கார்த்திக்கை அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் சிம்ரன் கொலை செய்வதை பார்த்து விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா? இல்லையா? அவருடைய லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
ரசிகர்கள் கருத்து:
போரடிக்காமல் ஒரு முறை தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்கலாம். சில குறைகளை சரி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் என படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்