சித்திரை திருவிழா வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுதல் விழா நடைபெறுவதையொட்டி 4 ஆம்தேதி மதுபானக் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மே 4ம் தேதி அன்று சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் விழாவினை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (TASMAC), மனமகிழ் மன்றங்கள்(FL2), தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் (FL3/FL3A), அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL11) ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.
4ஆம் தேதி மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தினத்தில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு
Discussion about this post