ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவங்க தன்னோட பொண்ணு ரியாவோட அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் மாம்” என்கிற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். ஷாலினி, ரியாஸ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தன்னோட கணவர் சைக்கோ மாதிரி நடத்துக் கொள்வதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டி வந்த ஷாலினி, தற்போது அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருந்த தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலையானதை கொண்டாடுவதாக ஷாலினி டைவர்ஸ் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் கணவருடன் இருக்கும் போட்டோவை கிழிப்பது போலவும், காலில் போட்டு மிதிப்பது போலவும் போட்டோ எடுத்து இருக்காங்க. தனக்கு விவாகரத்து கிடைத்ததை குறிக்கும் விதமாக Divorced என்ற வார்த்தையை கையில் எந்திய படியும் போட்டோஷூட் செய்துள்ளார்.
அத்துடன் குரலற்றவர்களாக உணரும் விவகாரத்து பெற்ற பெண்ணின் செய்து இது எனக்குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
“மோசமான திருமணத்தை விட்டுவிடுவது பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்” எனக்கூறியுள்ளார்.
Discussion about this post