தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம்.. உயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை.. நெகிழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சொன்னது..?
நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அமல்படுத்தினார்.., அதன் தொடக்கமாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கியது.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் எண்ணிக்கை இன்று 40% உயர்ந்து இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்றும் காலை மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தியுள்ளார். மேலும் அவர் மாணவர்களிடம் உணவு நல்லா இருக்கிறதா..? ஏதாவது குறை இருக்கிறதா..? என கேட்டுவிட்டு மாணவர்களின் நலன் பற்றி விசாரித்து உள்ளார்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி.., மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்(பணிகள்) சிற்றரசு, மண்டலகுழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 30% முதல் 40% மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளியை பொறுத்தவரை 358 பள்ளிகள், 65 ஆயிரத்து 130 மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
உணவில் குறை என்று இதுவரை யாரும் சொல்லவில்லை அப்படி ஏதாவது குறை இருந்தால்.., அதுவும் மாணவர்களின் நலனுக்காக சரி செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..