கொடநாடு கொள்ளை விவகாரம்..? ஊடகங்களை மிரட்டும் எடப்பாடி..!!
நேற்று எடப்பாடி கொள்ளை விவகாரம் பற்றி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அது குறித்து இன்று காலை செய்தியாளர்கள் முன் பேசிய எடப்பாடி பழனிசாமி. கொடநாடு கொலை வழக்கில் நான் சம்மந்தப்பட்டு இருப்பதாக கூறுவது.., அப்பட்டமான பொய். சில ஊடகங்கள் இந்த பொய்யை வெளியிடுவது தவறான செயல். அது மட்டுமின்றி சாலை செல்பவர்களிடம் இது பற்றி கேட்டு வீடியோ வெளியிடுவது மிகவும் குற்ற செயல்.
என் மீது குற்றம் சாட்டும் தனபால் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. நிலம் அபகரிப்பின் பெயரில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்., பின் ஜாமினில் பெயரிலே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அல்ல.., அவர் சசிகலாவின் கார் ஓட்டுநர். கனகராஜை ஜெயலிலதாவின் கார் ஓட்டுநர் என சொல்லுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும். கனகராஜ் ஒருநாள் கூட ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டுநராக இருந்ததே இல்லை. அவர் சசிகலாவிற்கு மட்டுமே கார் ஓட்டுநராக இருந்தவர்.., ஒரு குற்றவாளியை மறைந்த முதல்வருக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
கொடநாடு வழக்கு பற்றி நீதிமன்றத்தில் சட்டரீதியாக தொடரப்பட்டு வருகிறது.., நீதிமாற்றத்தில் இருந்து சரியான முடிவு வெளிவரும் வரை எந்த ஊடகம் என்னை பற்றி தவறான செய்தி பரப்பினாலும் அவர்கள் மீது வழக்கு தொடர்ப்படும்..,
பத்திரிகையாளர்களை நான் எச்சரிக்கிறேன்.., என் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்.., வழக்கிற்கு முடிவு வந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என ஊடகங்களுக்கும் அனைத்து பத்திரிகை துறையினரையும் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..