தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள்..!!
தமிழகத்தைச் சேர்ந்த இரு சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர்களை பெருமை படுத்தும் விதமாக சிறந்த நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சார்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி, என இரு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் திரவுபதி முர்மு விருது வழங்க உள்ளார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு வெள்ளி பதக்கமும், 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்படும். அரசு பள்ளியில் வேலை பார்த்து மாணவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம் கற்று தருவது மட்டுமின்றி சமூக சேவை பற்றியும் அவர்கள் சொல்லி கொடுத்ததால் இந்த விருது கொடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..