முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டார்கள் மாநாடு..!! 19 புதிய திட்டங்கள்..!!
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 68 ஆயிரத்து 873 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.
முதலீட்டு திட்டங்களுக்கான அடிக்கல் :
இந்தியாவின் மிக பிரபலமான 19 தயாரிப்பு நிறுவனங்கள் (Manufacturing Company) தமிழகத்தில் புதிய நிறுவனங்களை தொடங்க உள்ளன. 17,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான துவக்க விழா இன்று காலை தொடங்கியது. அதில் 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்களுக்கான இந்த மாநாட்டில் கையெழுத்தான சில ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்து 51,000 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 1.06 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது..
முதலீட்டாளர் மாநாடு குறித்த திட்டங்கள் :
திருவள்ளூரில் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அதன் பின் காஞ்சிபுரத்தில் 312 கோடி ரூபாய் முதலீட்டில் Hi-P நிறுவனம் தொடங்கப்பட்டது.. இதில் 700 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
Motherson Electronic components என்ற நிறுவனத்தில் 2 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. அதற்கான முதலீடு 2ஆயிரத்து 600 கோடி ரூபாய்.
3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள L&T நிறுவனத்தில்., 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள Horizon developers நிறுவனத்தில் 1, 500 பேருக்க்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டில் புதிதாக வரவுள்ள Renault Nissan Tech and business center-ல் 2 ஆயிரம் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள Milky mist நிறுவனத்தில்., 3 ஆயிரத்து 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அதுபோல் திருவள்ளூரில் வரவுள்ள Caplin point நிறுவனத்தில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.. இதற்கான முதலீடு 700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது..
1, 411 கோடி ரூபாய் முதலீட்டில் சுந்தரம் நிறுவனம் சார்பில் தொடங்கவுள்ள நிறுவனத்தில் 1,577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
Hibrow healthcare, Royal enfield உள்ளிட்ட நிறுவனங்களில் 650 பேருக்கு வேலைவாய்ப்பும் Grupo cosmos, gurit wind, weg industires நிறுவனங்களில் 12 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளது.
இதேபோல் பல்வேறு நிறுவனங்கள் இன்னும் சில மாதங்களில் தமிழக்த்திற்கு வரவுள்ளதால் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 புதிய திட்டங்கள் :
அப்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது.
மேலும் 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக 2021-23 ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலமாக 19 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனால் 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..