“விதியை மீறிய எல்&டி நிறுவனம்” இந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை..!!
விதிமுறைகளை மீறியதாக எல் அண்ட் டி (L&T) பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது 2 புள்ளி 50 கோடி அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் படி எல்&டி நிறுவனத்துக்கு 2 புள்ளி 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள . இதில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களுக்கு, அதன் அபாய வரம்பு மற்றும் கடன் விண்ணப்பப் படிவத்தில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிப்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதி மீறல் குறித்து பல்வேறு விசாரணைகள் செய்தும், நிதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி அதனிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்களை ஆராய்ந்தும் பார்த்ததில் நிறுவனம் விதி முறையை மீறியது கண்டறியப்பட்டுள்ளதால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..