தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள்..!! அமைச்சர் சிவசங்கர் அரியலூர் மாணவர்களுக்கு வழங்கினார்..!!
அரியலூர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430 மாணவிகளுக்கும், அரியலூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 81 மாணவர்கள், 16 மாணவிகள் என மொத்தம் 210 மாணவர்கள், 495 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,102 மாணவர்கள், 3,377 மாணவியர்கள் என மொத்தம் 6,479 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 3.13 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..