ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்..!! பரபரப்பான கரூர்..!!
கரூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டில் ஈடுபட்டு சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து அந்த சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் தமிழக முழுவதும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்து மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில் சுமார் 20-க்கு மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து அவர்கள் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற போது போலீசார் அவர்களே தடுத்து நிறுத்தினார்.. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..