“இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது..” முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு பெருமை சேர்ப்பதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
இந்த ஆண்டுக்கான இந்திய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலையே மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்..
“இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.., என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு பெருமையான தருணம்.
நான் முதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் உச்சங்களை தொடுவார்கள்,” என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..