தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் துவக்கம்..!! முக்கிய திட்டங்கள் விவாதம்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை அடுத்து மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்.
இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்தும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..