8 கோடியில் குத்துச்சண்டை அரங்கம்..!!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!!
சென்னை கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் குத்துச்சண்டை அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பல்வேறு விளையாட்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் இந்தியாவில் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது. மேலும் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல் அதிநவீன குத்துச்சண்டை மற்றும் பயிற்சி வசதி அரங்கம் சென்னை கோபாலபுரத்தில் 7 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அவரது வருகையையொட்டி, பள்ளி சிறுமிகள் பூக்கள் நீட்டி வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அமைச்சர்கள் புத்தகம் வழங்கி மகிழ்வித்தனர். கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது இரு தரப்பில் பெண்கள் போட்டியிட்டனர். இதில் வெற்றிபெற்ற போட்டியாளருக்கு முதலமைச்சர் கோப்பைகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..