கே.ஜி.எஃப். சேப்டர் 2′ படத்தின் முதல் பாடலான “தூஃபான்…” என்ற பாடல் வரும் 21ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப். சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இதில், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்ளில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கே.ஜி.எஃப். சேப்டர் 2’ படத்தின் முதல் பாடலான “தூஃபான்…” என்ற பாடல் வரும் 21ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இந்திய முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளதால் இப்பாடல் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளைப் படைக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தின் டீசர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.