விடுதலை படத்தில் விஜய்சேதுபதிக்கு பதில் இவரு நடிச்சி இருப்பாரா..?
சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சீமான், முதலில் அந்த வாத்தியார் கதாபாத்திரத்தில்(விடுதலை) நடிக்க இயக்குனர் வெற்றிமாறன் என்னை அழைத்தார் எனவும் இயக்குனர் வெற்றிமாறன் கேட்ட அளவுக்கு நாட்களை என்னால் கொடுக்க முடியாததால் அருமை தம்பி விஜய்சேதுபதி விடுதலை படத்தில் கமிட் ஆகி தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார் என்று கூறினார்.
விடுதலையின் முதல் பாகத்தை விட நான்கு மடங்கு வீரியத்துடன் இரண்டாம் பாகம் இருக்கும் என சீமான் தெரிவித்தார்.