நம்ப தமன்னா-வா இது…? “கடலில் கவர்ச்சி உடையில் தமன்னா”..
“ஜெயிலர்” பட நடிகை தமன்னா ஜாலியாக மாலத்தீவு கடற்கரையில் கொண்டாட்டம்.., சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து ஒரு பாட்டில் ரசிகர் பட்டாளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திய உள்ளார்.தற்போது ஒரு சிறிய விடுமுறையில் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் அவர்களது விடுமுறையை கொண்டாடும் இடம் என்றால் அது மாலத்தீவுகள் தான் ரஷ்மிகா, விஜய் தேவரைக்கொண்ட, ஆண்ட்ரியா, திவ்யதர்ஷினி, குஷ்பு, லட்சுமி ராய் என பல பிரபலங்கள் மாலத்தீவுகளுக்கு சென்று வருகின்றனர்.
தமன்னா தனது 16 வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. சினிமாவுக்கு வந்த தமன்னா பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார், தற்போது ரஜினிகாந்த்துடனும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
“ஜெயிலர்” படத்தில் தமன்னா ஆடிய காவாலயா பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள தமன்னா அங்கு விதவிதமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரைகள், ஹோட்டல்கள் என்று பலவிதமான படங்களை வெளியிட்டுள்ளார்.
அதிகம் இந்தியர்கள் வாழும் மாலத்தீவில் இந்திய பயணிகளுக்கு சலுகைகளும், விசா இல்லாத பயண வாய்ப்பும் உள்ளது. அதேபோல் 1 லட்சம் ரூபாய்க்குள் 1 வார சுற்றுலா செல்ல பட்ஜெட் வெளிநாடுகள் பட்டியலில் முதலில் இருப்பது மாலத்தீவுகள் தான்.
✒️ கெளசல்யா
Discussion about this post