அமெரிக்காவில் மிக உயரமான அண்ணல் அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வந்த அண்ணல் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்ட 19 அடி முழுஉருவ அம்பேத்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.
இந்தச் சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post