சென்னை தேனாம்பேட்டையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, வசனம், இசை என பன்முக திறமை கொண்டவர் டி. ராஜேந்தர். கடந்த 18 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நடக்க முடியாமல் சாலையை தவழ்ந்து கடக்க முயன்ற முனுசாமி(58) என்பர் மீது டி.ராஜேந்தர் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளன முனிசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் ராஜூவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த முனுசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தி.நகர் போலீசார் டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து, டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வத்திடம் மேற்கொண்ட விசாரணையில் விபத்து நடைபெற்ற போது டி ராஜேந்தர் காரில் இருந்தார் எனவும் விபத்திற்கு அவர் பொறுப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.