199 ரூபாய்க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு…!! அமைச்சர் பெரிய கருப்பன் அளித்த உறுதி…!!
கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருள் தருவதே கூட்டுறவு துறையின் நோக்கம். இத்துறையின் சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று வகையான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்துள்ளோம்.
199 ரூபாய்க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு :
பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பாகவும்.
499 ரூபாய்க்கு கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு :
மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும்.
999 ரூபாய் கொண்டது பெரும் பொங்கல் தொகுப்பு :
மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த கூட்டுறவு பொங்கல் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் அவசியம். தமிழக முதலமைச்சர் இதுபோன்ற சிறப்பு தொகுப்புகளை பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்து விற்பனை செய்வதன் மூலம் கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கு உதவும் என்று அறிவுறுத்தினார்.
ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை எப்போது வழங்க தொடங்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார். வேளாண் துறை, வருவாய்துறை, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அந்தந்த மாவட்டத்தில் எவ்வளவு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது என்று பேசப்பட்டு ஒரே விவசாய இடம் கரும்புகளை மொத்தமாக வாங்குவது நன்றாக இருக்காது என்பதால் பரவலாக தேவைக்கேற்ற கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் இவ்வாறே பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..