நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ல் வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெற நடிகர் சூர்யா குடும்பத்துடன் டெல்லி சென்று உள்ளார். சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடம் இருந்து பெற போகிறார்.
இன்று மாலை டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதில் நடிகர் சூர்யா தேசிய விருதை பெற உள்ளார்.
அதற்காக தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தின் நடிகை அபர்ணா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோர் இன்று மாலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விடம் தேசிய விருதை பெற உள்ளனர். நடிகர் சூர்யா சென்னை விமான நிலையத்திற்கு இருந்து டெல்லி புறப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.