தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் கனவான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டைப் போல் உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தையும் பார்த்து நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங் மற்றும் டெக்னிக்கல் போன்றவை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோழர் காலத்தில் இருந்த பிரம்மாண்டமான அரண்மனைகள் மற்றும் அப்போது நடந்த சண்டைக் காட்சிகள் என அனைத்தும் தாறுமாறாக உள்ளது என மெய்சிலிர்ந்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் வேற லெவலில் கொடுத்துள்ளதார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் பார்த்திபன் ஒரு படி மேலே சென்று இந்த திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். இந்நிலையில் சில தெலுங்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகட்டிவ் கமெண்ட்டுகளை பரப்பி வருகின்றனர். அதில் பாகுபலி படத்துடன் பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிட்டுப் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு பல ரசிகர்கள் விளக்கம் கொடுத்தும் பதிலடி கொடுத்தும் வருகின்றனர் .
இயக்குநர் ராஜமெளலிக்கு ரொம்ப பிடித்த கதை பொன்னியின் செல்வன். அவர் இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்று வெப் சீரிஸ் ஆக பண்ணலாம் என்று கூறினார் என்பது குறிப்பித்தக்கது.