சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அதன் பின் இறுதியாக இந்த படம் வரும் மே மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் பார்த்து விட்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார் நன்றி” என பதிவிட்டுள்ளார்.