காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அச்சரப்பாக்கம் வெங்கடேஷ்புரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தத அவரின் உடலுக்கு காவல் கண்காணிப்பாளர் சாய் பீரிணீத், மதுராந்தகம் காவல்துணை கண்காணிப்பாளர் சிவசக்தி உட்பட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சக காவலர்கள் என அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
