சென்னையின் முக்கிய இரயில் நிலையங்களில் வர இருக்கும் சூப்பர் திட்டம்…!
இந்தியாவில் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வாயிலாக முன்பதிவு இல்லாத டிக்கெட் பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்து ரயில் சேவைகள் துவங்கிய பிறகு மீண்டும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களின் செயல்பாடு படிப்படியாக துவங்கப்பட்டது.
தற்போது தெற்கு ரயில்வேயில் 166 இடங்களில் 353 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை ரயில்வே கூட்டத்தில் 63 இடங்களில் 128 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த டிக்கெட் வழங்கும் இயந்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் குறிப்பாக தாம்பரம், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், பெரம்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கியமான 42 ரயில் நிலையங்களில் 100 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்களை டிக்கெட் வழங்கும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது சென்னை சென்ட்ரல் தாம்பரம், எழும்பூர், அரக்கோணம், ஆவடி, பெரம்பூர், செங்கல்பட்டு, மாம்பலம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 42 ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மூன்று சதவீதம் கழிவுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஜூன் 20ஆம் தேதி மதியம் மூன்று மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும்,
இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெற்கு ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்