கோடை விடுமுறை கொண்டாட்டம்..!! குளு குளு பகுதிக்கு படை எடுத்த பொதுமக்கள்..!!
அடிக்கும் வெயிலில் மக்கள் அங்கங்கே குளிரான பகுதியை தேடி படை எடுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.., அல்லது அந்த வகையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கொடைக்கானல் ஊட்டி போன்ற மலை பிரேதச பகுதிகளை தேடி சென்றுள்ளனர்.
அதற்காக மக்களை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 11 நாட்கள் 126வது மலர் காட்சி நடக்கிறது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
45 ஆயிரம் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை 126வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வோர்ல்டு, காளான், ஆக்டோபர் மற்றும் மலர் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான மலர்கள் பெங்களூர், ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது..