குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..!
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் பல பகுதிகளில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்கின்றன.
இந்த நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் கட்டுக் கடங்காத சுற்றுலா பயணிகள் வருகையிலும் அனைத்து அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து சென்ற நிலையில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலம் கருதி போலீசார் தற்காலிகமாக அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியுடன் வந்த சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்கின்றனர்.
-பவானி கார்த்திக்