தூங்கும் மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர கொலை..!
தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் கணேசன் (50)-முத்துலட்சுமி (45). இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாகவும் முத்துலட்சுமி தூய்மை பணியாளராகவும் வேலை செய்து வந்தனர்.
தம்பதியினருக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது. கணேசன் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி மனைவியுடன் தகறாறு செய்து வந்துள்ளார்.
இதனால் முத்துலட்சுமி அவருக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்தநிலையில் கணேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.30,000 கடன் வாங்கியுள்ளார். இதனால் கடனை கொடுத்தவர் பணத்தை கேட்டு இருகிறார். இதனால் முத்துலட்சுமியின் தங்கையான சாந்தி பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வந்த கணேசன் எதற்காக சாந்திக்கு பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறி தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சணை ஏற்பட்டது. அதன் பின்னர் தனது குழந்தைகளுடன் முத்துலட்சுமி தூங்கு சென்றுள்ளார்.
ஆத்திரம் அடங்காத கணேசன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு அங்க்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் தலை சிதறி முத்துலட்சுமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, போலீசாருக்கு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசனை திவீரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து கணேசனை கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டு வருகிண்றனர்.
தூங்கும் போது மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்