பொங்கலுக்கு பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களின் வெளியாகும் தேதி குறித்தான அறிவிப்பை இரண்டு படங்களும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தல தளபதியை கொண்டாட தயாராகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் ஒன்றாக வெளியாகும் என்று அறிவிப்பு வந்த முதல் கடந்த இரண்டு மாதங்களாக இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு படங்களின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரு படங்களின் டிரைலரும் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் துணிவு படமும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பழகிய கமெர்ஷியல் கதைக்களத்துடன் வாரிசு படமும் வெளியாக இருப்பது தெரிகிறது.
இந்நிலையில் இரு படங்களின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இரு படங்களுக்கும் ஓரு நாள் இடைவெளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு படம் வரும் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வாரிசு படத்தின் படக்குழு வாரிசு படம் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதால் இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.