கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் பனி நீக்கம் செய்ய அரசு முடிவெடுத்ததை அடுத்து செவிலியர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து மக்களுக்காக மருத்துவமனையில் பணியாற்றினர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் செவிலியர்கள் ஆற்றிய பனி மிகவும் முக்கியமானதாகவும் மகத்துவமானதாவும் பார்க்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒப்பந்த செவிலியர்களை பனி நீக்கம் செய்ய வேண்டும் அரசு அறிவித்தது. இதனால், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்சிகளும் கண்டங்களை தெரிவித்து வந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பனி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளிக்கையில் மக்களை தேடி மருத்துவத்தில் இடைநிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. பொது சுகாதாரத்துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. இது போன்று சுகாதாரத்துறையில் இருக்கும் காலி பணியிடங்களை இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள் என்றும் அவர்களின் சம்பளம் 14,000 லிருந்து 18,000 ஆகா உயற்றப்படும் கூறினார். மேலும், ஒப்பந்த செவிலியர்கள் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், எம்ஆர்பி மூலம் கடந்த 2019 ம் ஆண்டில் 2345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்அதில் 2323 பேர் பணியில் சேர்ந்தனர். அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 5736 பேரை பணிக்கு அழைத்ததில் 2366 பேர் பணியில் சேர்ந்தனர். இது போன்று அரசின் விகிதாசாரங்களை பின்பற்ற தவறிவிட்டு செவிலியர்களை அதிமுக ஆட்சியில் பணியமற்றியதால் தான் தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அதிமுக அரசையும் பழனிசாமியையும் குற்றம் சாட்டினார். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த பேட்டியில் பேசினார்
Discussion about this post