மாணவர்கள் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாறக்கூடாது..!! சபாநாயக்கர் அப்பாவு அனல் பேச்சு..!!
உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்வை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 69 கல்லூரிகளில் படிக்கும் 6361மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களிடையே உயர் கல்வியை ஊக்கப்படுத்துவது வகையில் தமிழக முதல்வர் அவர்களால் மாதம் தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டு இதன் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைத்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறும் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.
விழாவினைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 69 கல்லூரிகளைச் சேர்ந்த 6361 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
பள்ளிகள் என்றாலே மாணவர்களிடையே சிறுசிறு பிரட்சனைகள் இருக்கத்தான் செய்யும் அவர்கள் சண்டையில் எந்த வன்மமும், இருக்காது நெல்லையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை ஊடகங்கள், அரசியல்வாதிகள் ஜாதிய பிரச்சனையாக வெளியிடக் கூடாது. நெல்லை மாவட்டத்தில் எங்கும் ஜாதிய சண்டை, சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை, நமது முதல்வர் ஜாதி, மதம், கட்சி கடந்து யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பள்ளி வளாகத்திற்குள் நடக்கும் மாணவர்கள் பிரச்சனைக்கு தலைமை ஆசிரியர்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என கூறினார். முன்னதாக நெல்லை புதிய மேயர் ராமகிருஷ்ணனுக்கு சபாநாயகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..