செல்ஃபி மோகம் அராஜகத்தில் ஈடுபட்ட பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள்..!! போலீஸ் அதிரடி..!!
சென்னையின் அடையாளம் என்று அழைக்கப்படும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல ஒரு ரயில் நிலையமும், புறநகர் ரயில்கள் செல்ல ஒரு ரயில் நிலையமும் கொண்டுள்ளது.
புறநகர் இரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இந்த புறநகர் இரயில் நிலையத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்பதால், காலை, மற்றும் மாலை நேரங்களில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் சில கல்லூரி மாணவர்கள் குரூப்பாக சேர்ந்து செல்லும் போது, அவர்களது மனதிற்குள் தாங்கள் ஒரு ஹீரோ என்ற மனநிலையில் இருப்பது வழக்கம்…
அதுமட்டும் தாங்கள் ஹீரோ என்று காட்டுவதற்காக ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் அட்டகாசம் செய்வது பெண்களை கேலி செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அவர்களை இரயில்வே போலீசார் கண்டித்தாலும் அது குறைந்தபாடு இல்லை.. மாணவர்கள் என்பதால் எதிர்காலம் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து மட்டுமே அனுப்புவது அவர்களுக்கு அது வசதியாகிவிட்டது.
அப்படி தான் நேற்று ஒரு செயல் சென்னை சென்ட்ரலில் அரங்கேறியுள்ளது., சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் பலகையின் மீது ஏறி நின்று கத்தி கூச்சலிட்டு, ஆட்டம் போட்டுள்ளார்கள். மேலும் தங்கள் கல்லூரி பேனரை பெயர் பலகையில் வைத்து குழுவாக புகைப்படம் எடுத்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்..
நடைமேடையில் மாணவர்கள் செய்த இந்த அட்டகாசத்தால் ரயில் பயணிகள், பெண்கள் என அனைவரும் அச்சப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அப்போது ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரன், மாணவர்களிடம் பேசுகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் வழக்கு, கோர்ட்டு என அலைய நேரிடும்., இதுவே கடைசி முறையா இருக்கட்டும் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.
அதன் பின் அவர்களிடம் பெயர், வீட்டு அட்ரஸ் எழுதி வாங்கி கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கல்லூரி முதல்வரிடம் பெயர் பட்டியலில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
அதேநேரம் மாணவர்களை எச்சரித்தால் மட்டும் போதாது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள் என பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..