“முத்தமிழ் முருகன் மாநாடு..” முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!!
பழனியில் இன்றும், நாளையும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள “முத்தமிழ் முருகன் மாநாட்டை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள்., முருகன் குறித்த கட்டுரைகளை அனுப்பி வைத்துள்ளனர்., மேலும் முருகனின் புகழ் பரப்பிக் கொண்டும், சேவையாற்றிக் கொண்டிருக்கும் 16 பேருக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்..
இந்த மாநாட்டில் பக்கதர்கள் பார்ப்பதற்காக நாடகம், பாட்டு, பரதநாட்டியம், சொற்பொழிவு மற்றும் கிராமிய பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சம்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர், மேலும் 2 நாட்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில், 3டி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முருகனின் 6 நிமிடம் பாடல் காட்சிகள், அரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகள் குறித்த பதிவுகள், மாநாடு முடிந்து ஒரு வாரம் வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..