முதலமைச்சரை சந்தித்த மாணவன்..! குவியும் பாராட்டு..!
12-ம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ள சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு :
கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை +2 பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
அதில் 4 லட்சத்து 08ஆயிரத்து 440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் 3 ஆயிரத்து 750 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். அதில் தேர்வு எழுதியதில் 96% சதவிகிதம் பேர் வெற்றி பெற்றனர்.
நாங்குநேரி மாணவன் :
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முனியாண்டி – அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னத்துரை. மகள் சந்திரா இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் சின்னத்துரையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்டநாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.
மாணவன் தேர்ச்சி :
இந்நிலையில், பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியோடு எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த மாணவனுக்கு முதலமைச்சர் மட்டுமின்றி பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திருநங்கை மாணவி :
அதேபோல ஒரே ஒரு திருநங்கை மாணவி மட்டும் தேர்வு எழுதி இருந்த நிலையில் மாணவி “நிவேதா” 490/600 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவி நிவேதாவிற்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.