மும்பை விடுதியில் மாணவி கொலை..! பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேன்..!!
மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் அரசு கல்லூரியில் 3 மாணவிகள் விடுதியில் தனியாக தங்கியுள்ளனர். இதனை அறிந்த வாட்ச்மேன் ஓம் பிரகாஷ், 18 வயது மாணவி ஒருவரை பின் தொடர்ந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பு.., மாணவியின் அறை கதவை தட்டி நீ தூங்குவதை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது. மேலும் சில ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். மறுநாள் காலை இதை பற்றி அந்த மாணவி, ஹாஸ்டல் வாடனிடன் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த வாடன் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை, இதை பற்றி வாட்ச்மேனிடமும் எந்த கேள்வியும் கேட்காமல் விட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டுள்ளார். ரூம் காதவை உள் தாழ் இட்டுவிட்டால் வெளியே இருந்து திறக்க முடியாது. எனவே இந்த வாட்ச்மேன் விடுதியின் பின் பக்கம் இருக்கும் பைப் வழியாக முதல் மாடி ஏறி, படிக்கெட் வழியாக மாணவியின் அறைக்கு சென்றுள்ளார்.
மாணவியின் அறைக்கு மேல் இருக்கும் ஜன்னல் துளைவழியாக உள்ளே சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மாணவியையும் கொலை செய்துள்ளார். அதே வழி வழியாக வெளியே வந்துள்ளார்.
நேற்று காலை தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இதை கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயரில் வாட்ச்மேனை கைது செய்ய சென்றபோது.., போலீசில் இருந்து தப்பித்து ரயில் முன் விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
பின் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாணவியின் உடல் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதை வாங்க மறுத்த மாணவியின் தந்தை, வாட்ச்மேன் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறான் என, என் மகள் இதற்குமுன் புகார் அளித்த பொழுதே நடவடிக்கை எடுத்து இருந்தால், இப்படி நடந்து இருக்காது.
எனவே நிர்வாகத்தின் மீதும், வாடன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற பின்னரே மாணவியின் உடலை வாங்கி சென்றனர்.