யாஷிக்காவுடன் டேட் செய்யும் ரிச்சர்ட் ரிஷி..! வெளியான சில கிசு கிசு..!!
நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரரும், நடிகரும் ஆன ரிச்சர்ட் ரிஷியும், பிக்பாஸ் பிரபலம் யாஷிகாவும் ஒன்றாக இணைந்து இருக்கும் போட்டொ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசு கிசு வெளியாகியுள்ளது.
இந்த கிசுகிசு உண்மை என்று சொல்லும் விதமாக, யாஷிகா ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தம் இடும் போட்டோவும், கட்டி பிடித்து இருக்கும் போட்டோவும்.., இன்ஸ்டா பக்கத்தில் யாஷிகா வெளியிட்டுள்ளார். இதை போஸ்ட் செய்ததுடன் ஸ்டோரியாகவும் போட்டுள்ளார்.
இருவரும் காதலர்கள் தான் என்று.., பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், யாஷிகா அம்மா அதை மறுத்துவிட்டார். இது அவர்கள் இருவரும் நடித்து வரும் படத்தின் காட்சி என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து யாஷிகாவிடம் கேட்டதற்கு, நானும் சில நொடிகள் தான் என்ற படத்தில் நாங்கள் இருவரும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. என யாஷிகா தெரிவித்துள்ளார்.