9 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை..!! தமிழகத்தை தாக்க போகும் 1ம் எண் புயல்..!!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னை, நாகை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
அது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று “வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தமானது தாழ்வான பகுதிகளுக்கு கடந்து இன்று மத்திய மேற்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கடலூர், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும்,
ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும்,
ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து தென் தென்கிழக்கே 290 கிலோ மீட்டர் மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து தெற்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் தீவிரமடைந்துள்ளது..
அது தொடர்ந்து வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது..
அதன் பிறகு, இது அடுத்த 2 நாட்களில் வடக்கு-ஒடிசா-கங்கை நதி மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் அதை ஒட்டிய வடக்கு சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..