7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…!!
தமிழகத்தின் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், வட கடலோர தமிழ்நாட்டின் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழையும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25-ந்தேதி லேசான முதல் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..