நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 176.9 மில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
2022ம் ஆண்டிற்கான செலிபிரிட்டி பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை பட்டியலில் இடம் பிடித்துள்ள டாப் 25 இந்திய பிரலங்களின் பிராண்ட் மதிப்பும் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் சினிமாத்துறை பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு பட்டியலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது நம்பர் 1 இடத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ரன்வீர் சிங்கிடம் இழந்துள்ளார். ரன்வீர் சிங்கின் 20201ம் ஆண்டு பிராண்ட் மதிப்பு 23.4 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2022ம் ஆண்டு $181.7 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ள ரன்வீர், 2022 ஆம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க பிரபலமாக உருவெடுத்துள்ளார்.
விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு $176.9 மில்லியனாக குறைந்துள்ள குறிப்பிடத்தக்கது.