கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்கு வந்த கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் வழக்கறிஞர் மற்றும் விசாரணைக்கு வந்த மேலும் 4 பேர் மீது ஆசிட் பட்டதில் காயமாகி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கவிதா மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் செல்ல நபரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் விசாரனை நடத்தினர். சம்பவ இடத்தில் துணை ஆணையர் சந்தீஸ் விசாரணை நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் அந்த பெண்ணின் கணவர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் சந்தீஸ், “தண்ணீர் பாட்டிலில் ஆசிட் எடுத்து வந்திருக்கலாம், தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
முழு விசாரணை நடந்து வருகிறது” எனக்கூறினார்.
Discussion about this post