ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு..!! இன்று முதல் ஆரம்பம்..!!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார்
அதன்படி, 23-ஆம் தேதி தஞ்சை,
நாகை, 25-ம் தேதி கன்னியாகுமரி,
திருநெல்வேலி, 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம்,
தென்காசி, விருதுநகர் 27-ம் தேதி
தருமபுரி, கிருஷ்ணகிரி 29 – ம் தேதி
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 30-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 23-ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கான திமுகவின் பிரசாரப் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..