ஒரே நாளில் 65 லட்சமா..? சிக்கியது யார் பணம் தெரியுமா..?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், நாயக்கனூர், மலைச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் திருப்பதி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப 31 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அதே போல் நேதாஜி நகர் பகுதியிலும் ஏ.டி.எமில் பணம் நிரப்ப ஆஞ்சி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச்செல்லப்பட்ட 34 லட்சம் பணத்தையும், மற்றும் ஆலங்காயம் – ஆசனாம்பட்டு சாலையில் அசோக்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 90, 700 ரூபாய் பணத்தையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..
அதனை தொடர்ந்து ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப பணங்களை கொண்டு சென்ற திருப்பதி மற்றும் ஆஞ்சியிடம் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம், மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 65 லட்சம் ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது தேர்தல் பறக்கும் படையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..