நிர்மலாதேவி ஜாமின் மனு..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்கள்..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ்பெற்ற தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் பேராசிரியர் நிர்மலா தேவி.., அதே பள்ளியில் பயிலும் சில மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும், ஒரு சில பிரமுகர்களுக்கு மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பெயரில் பேராசிரியர் நிர்மலா தேவியை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்..
நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.., மாணவிகள் கொடுத்த வாக்குமூலங்களை வைத்து காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.., அதற்கான தீர்ப்பு இன்று வெளியானது.
பேராசிரியர் நிர்மலா தேவி 2018ம் ஆண்டில் பயின்ற சில மாணவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி சில அரசியல் பிரமுகர், உயர்கல்வித்துறையில் செல்வாக்கானர்வர்கள் பலருடன் பாலியல் ரீதியாக மாணவிகளை பயன்படுத்தியுள்ளார்..
இதை வாடிக்கையாக வைத்திருந்த நிர்மலா தேவி மற்ற மாணவர்களிடம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.., அதற்கு சம்மதிக்காத மாணவர்கள், அவர் பேசியதை ஆடியோவாக பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்..
ஆனால் நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால்.., அதன் பின் உயர் அதிகாரிகளிடம் மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் ஆளுநர் மாளிகையில் அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்திடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அதனால் தமிழக முழுவதும் அந்த வழக்கு பேசும் பொருள் ஆனது குறிப்பாக அரசியல் பிரமுகர்களிடையே நிர்மலா தேவி வழக்கு சி.பி, சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியனானது, அப்போதைய முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாததால். திமுக தலைமையிலான அரசியல் கட்சி அமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் அந்த வழக்கில் நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.. இருப்பினும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின் அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.., விசாரணை நிறைவுபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் தரக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், இடைக்கால ஜாமின் தர மறுப்பு தெரிவித்து. விசாரணையை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்துள்ளார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..