ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..!! முக்கிய குற்றவாளிகள் கைது..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசன்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில்சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாகனத்தில் இருந்து பட்டாசு தயாரிக்க கூடிய கெமிக்கல் மருந்தை இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் முருகன் மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்த ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவது தொடர் கதையாகி வருகிறது.
இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையும் எழுந்த நிலையில் வெடி விபத்து நடந்த ஆலையில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வுகள் நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் இருவர் இறந்த நிலையில் ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் போர் ஃமேன் பாலமுருகனையும், ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு வாங்கி ஆலையை நடத்திய கண்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற எண் இரண்டில் ஆஜர் படுத்திய நிலையில் கண்ணன், பாலமுருகன் இருவரைம் 15 நாள் சிறை காவவில் வைக்க நீதிபதி பாரதி உத்திரவிட்டார்.
இருவரையும் விருதுநகர் மாவட்ட சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.மேலும் ஆலையின் உரிமையாளர் ஜெயராஜை தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடிவந்த நிலையில் சிவகாசி தனியார் மருத்துவமனையில் ஜெயராஜ் நெஞ்சுவலி என்று அனுமதிக்கப்பட்டுள்தால் சிகிச்சை முடிந்தவுடன் அவர் மீது விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.