100 நாள் வேலை திட்டம்..!! ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன போராட்டம்..!! பரபரப்பான திருப்பூர்..!!
திருப்பூரில் 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலயுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ரூபாய் 600 கூலி வழங்க வேண்டும், மாநகராட்சி நகராட்சிகளோடு அருகாமை ஊராட்சிகளை இணைப்பதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். எனவே கிராமப்புற வேலை உறுதித் திட்டம் போல நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்., அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கிராமப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களில் வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 400க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..