கொக்கி போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!! மெய் சிலிர்க்க வைக்கும் வழிபாடு..!!
ஆற்காடு அருகே அம்மன் கோவில் திருவிழாவில் கொக்கி போட்டு நேத்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்ட கிராம பக்தர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக காலையில் முத்தாலம்மன், பொன்னியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிருதம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் சுமார் 308 பால்குடம் தலைமேல் சுமந்து கோவில் வந்தடைந்ததும் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்..
அதனை தொடர்ந்து ஊர் நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது விவசாய நிலத்தில் விளைந்த தானியங்களைக் கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிப்பட்டதோடு அம்மனுக்கு காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், எலும்பிச்சை பழம் குத்திக்கொண்டும், பல்வேறு வாகங்கல் கொக்கி போட்டு இழுந்து வந்தனர்.
அப்போது சிலம்பாட்டம், புலியாட்டம், கொக்கலியாட்டம், என பலவித ஆட்டங்களுடன் ஊர்வலம் வந்தனர். அதன்பின் அந்தரத்தில் பறந்த அம்மனுக்கு பூமாலை போட்டு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஆயிலம் சுற்றியுள்ள கிராமங்களான அருங்குன்றம், கீழ்குப்பம், ராமாபுரம், கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான பொது மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.