“ஸ்ரீ ரெட்டி செய்த சேட்டை என்னவென்று தெரியும்” – விஷால்..!
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர், சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். அந்த சமயத்தில், இவரது புகார் மிகப்பெரிய ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நடிகர் விஷால் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். முதியோர் இல்லத்தில் உணவு அளித்துவிட்டு, அங்கிருந்து வெளியே வந்தபோது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விரைவில் தமிழகத்திலும், இதுபோன்ற கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நடிகை ஸ்ரீ ரெட்டி விஷால் மீது வைக்கப்பட்ட பாலியல் புகார் குறித்தும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த விஷால், “ஸ்ரீ ரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் என்னவென்று தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவது தவறான செயல்” என்று தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்