கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்?
தனது வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, வாழை என்ற படத்தை, மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் வாழை. வாழை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒட்டுமொத்த இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து புரமோஷன் செய்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 6 நாட்களில், ரூபாய் 15 கோடியை, வசூலித்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து, சாகித்ய அகாடமி விருது வென்ற சோ தர்மன் என்ற எழுத்தாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் எழுதிய நீர்ப் பழி என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள ஒரு கதை தான், இந்த வாழை படத்தின் கதை என்று கூறியுள்ளார்.
மேலும், சில விஷயங்களை மட்டும் மாரி செல்வராஜ் மாற்றி எடுத்திருக்கிறார் என்றும், சோ தர்மன் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பது, பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்